search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவி கடத்தல்"

    • சின்னையன். மகள் ஊட்டத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
    • சதீஷ் மற்றும் நான்கு பேர் கூட்டாக மாணவியை காரில் கடத்திச் சென்ற தகவல் தெரிய வந்தது.

    திருச்சி.

    திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஊட்டத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது 16 வயது மகள் ஊட்டத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பெற்றோர் பல்வேறு இடங்களில் மகளை தேடி அலைந்தனர். இந்த நிலையில் ஊட்டத்தூர் பெட்ரோல் பங்க் அருகாமையில் ஊட்டத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் சதீஷ் மற்றும் நான்கு பேர் கூட்டாக அந்த மாணவியை காரில் கடத்திச் சென்ற தகவல் தெரிய வந்தது.

    இதில் சதீஷ் அந்த மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே அவர் நண்பர்கள் உதவியுடன் காதலியை திருமணம் செய்ய கடத்திச் சென்று இருக்கலாம் என கூறப்பட்டது. இது தொடர்பாக சின்னையன் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் கடத்தப்பட்ட தனது மகளை மீட்டு தருமாறு கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிளஸ்-1 மாணவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளி மாணவியை திருமணத்துக்காக கடத்திச் சென்ற போது பறக்கும்படை அதிகாரிகள் அவர்களை பிடித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெச்சானிப்பட்டி பிரிவு அருகே இன்று பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் பள்ளி சீருடையில் ஒரு மாணவியும், 3 வாலிபர்களும் இருந்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அதில் மணப்பெண்ணுக்கு தேவைப்படும் பட்டுச் சேலை, திருமாங்கல்யம், நகை, மாப்பிள்ளைக்கு தேவையான பட்டு வேஷ்டி, சட்டை ஆகியவை இருந்தது.

    இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்றும், தனது அத்தை மகளான 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதற்காக காரில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவர்களுக்கு உடந்தையாக வந்த தாமரைச் செல்வன், செந்தில்குமார் ஆகியோரையும் பறக்கும்படையினர் பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    காரில் கடத்தி வரப்பட்ட மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அவருக்கு கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுத வந்த நேரத்தில் அவரை ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் கடத்தி வரப்பட்டார்களா? என்ற கோணத்திலும் மைனர் பெண்ணை கடத்தி வந்த குற்றத்துக்காக அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த பகுதி கடவூர் என்பதால் இது குறித்து அப்பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    10-ம் வகுப்பு அரசு கடைசி தேர்வை எழுத முடியாமல் தவற விட்டு வாலிபர்களுடன் வந்த மாணவி போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    கோபி அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    கோபி:

    கோபி அடுத்த புதுவள்ளியாம்பாளையத்தை சேர்ந்தவர் பேபி. இவரது மகள் தாரண வள்ளி. இவர் கோபியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பி வர வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரின் பெற்றோர் கோபி போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் மாணவியை கணக்கம் பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    போடி அருகே பள்ளி மாணவியை கடத்திய தாய்-மகன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிக்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி போடி சுப்புராஜ் நகரில் உள்ள விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் சூர்ய பிரகாசுக்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைக்க பெண் கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு சிறுமியின் தந்தை மறுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ் மற்றும் அவரது தாய் சரவணம் ஆகியோர் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணவியை கடத்திய சூரிய பிரகாஷ் அவரது தாய் சரவணம் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குருந்திரக்கோட்டையை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி. இவருக்கு ஊட்டி குன்னூரை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கங்காதரன் உயிரிழந்து விட்டார். இதனால் ஜோதிலட்சுமி குழந்தைகளுடன் குருந்திரக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அவரின் 15 வயது மகள் ராஜேந்திரபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் வழக்கம் போல் கடந்த 3-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு, தனது சைக்கிளில் சென்றுள்ளார். மாலை பள்ளி முடிந்து அனைத்து மாணவர்களும் வீடு திரும்பிய நிலையில் ஜோதிலட்சுமியின் மகள் வீடு திரும்பவில்லை. இதனால் உடன் படிக்கும் சக மாணவிகளிடம் விசாரித்தபோது மகள் குறித்தஎந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே ஊட்டி குன்னூரில் உள்ள உறவினர்கள் வீட்டில் மாணவி இருப்பதாக ஜோதிலட்சுமிக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் உறவினரான ரமணிதரன் (39) என்பவர் மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஜோதிலட்சுமி அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:-

    ஊட்டி குன்னூரை சேர்ந்த ரமணிதரன், ஜோதிலட்சுமியின் கணவரான கங்காதரனின் தம்பி என்பதும், தனது அண்ணனின் மகள் தனக்கும் மகள் என்ற உறவு பாராமல் ரமணிதரன் 15 வயதான பள்ளி மாணவி மீது காதல் வயப்பட்டது தெரியவந்தது. இதனால் அவரை எப்படி யாவது அடைந்துவிட வேண்டும் என திட்டம் தீட்டி வந்துள்ளார். அவரை கடத்தி கட்டாய திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 3-ந் தேதி மாணவி பள்ளிக்கு செல்லும் போது வழிமறித்து நலம் விசாரித்துள்ளார். மாணவியும் தனது சித்தப்பா என்பதால் சூழ்ச்சியை உணராமல் சாதாரணமாக பேசியுள்ளார். பின்னர் தன்னுடன் ஊட்டிக்கு வரவேண்டும் என அழைத்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து தான் தாயுடன் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் அவரை மிரட்டி குன்னூருக்கு கடத்தி சென்றார்.

    பின்னர் தனது பேச்சுக்கு உடன்படவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் மாணவியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, குன்னூரில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. பின்னர் மாணவியை மீட்ட போலீசார், ரமணிதரன் மீது ஆள்கடத்தல், சிறுமியை மிரட்டி திருமணம் செய்தல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள இடையப்பட்டியைச் சேர்ந்தவர் போத்திராஜா. இவரது மகள் திவ்யா (வயது 19). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு அலங்காநல்லூரைச் சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    திவ்யா நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த செல்வமணி, நாம் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறி திவ்யாவை கடத்திச் சென்று விட்டார்.

    இதற்கிடையே வேலை முடிந்து வீடு திரும்பிய போத்திராஜா, வீட்டில் திவ்யா மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம், பக்கத்தில் விசாரித்தபோது திவ்யாவை செல்வமணி கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக போத்திராஜா, அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    திருக்கனூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே விநாயகம்பட்டை சேர்ந்த 15 வயது மாணவி சோரப்பட்டு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் அந்த மாணவி இல்லை.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் திருக்கனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரில் தங்களது மகளை அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கூலித்தொழிலாளி கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு கடத்தல் பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரனையில் மாணவியை கூலித்தொழிலாளி கடத்தி சென்று நோணாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்திருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் நோனாங்குப்பத்துக்கு சென்று மாணவியை மீட்டனர். கூலித்தொழிலாளியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கூலித்தொழிலாளிக்கு 17 வயதே ஆவதால் அவரை அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    வெள்ளகோவிலில் பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வரகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே பகுதியில் திருப்பூர் வீரபாண்டிபிரிவை சேர்ந்த மணிகண்டன் தனது மனைவி ராணி, 17 வயது மகனுடன் தங்கி அம்மிக்கல், ஆட்டுக்கல் கொத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது மாணவியும், மணிகண்டனின் மகனும் பழகி வந்தனர்.

    இந்நிலையில் 6-ந்தேதி காலை கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற மகள் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. 

    இந்நிலையில் மணிகண்டனும் குடும்பத்துடன் மாயமாகிவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து பெண்ணின் தாய் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.

    இதனையடுத்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது மனைவி ராணி மற்றும் அவர்களது 17 வயது மகனையும் தேடி வருகிறார்கள். பள்ளி சிறுமியை மீட்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொடைக்கானல் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராணி (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த ராணி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் கொடைக்கானல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். ஊத்து அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் நோக்கி வந்த பஸ்சில் ராணி ஒரு வாலிபருடன் சென்றது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் ஊரல்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 24) என தெரியவந்தது. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு தூண்டியது போலீஸ் விசாரணையில் தெரியவரவே அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையம் செல்வம் நகரைச் சேர்ந்தவர் தேவி (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த தேவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அந்த புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் விஜயவேல் (வயது 27) என்பவர்தான் ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தி இருக்க கூடும் என தேவியின் தந்தை குறிப்பிட்டுள்ளார். 

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவி மற்றும் கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை காரில் கடத்திய 4 பேர் குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவரது மகள் சுகன்யா(வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சங்கரசுப்பு மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார். வீட்டில் சுகன்யா மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில் மாலையில் திரும்பிவந்து பார்த்தபோது சுகன்யாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிய போது 4 பேர் காரில் கடத்திசென்றதாக கூறினர்.

    இதையடுத்து சங்கரசுப்பு டவுண்போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×